திருவாரூா் தியாகராஜா் கோயிலில் திருவாதிரை உத்ஸவ பந்தல்கால்

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் திருவாதிரை உத்ஸவத்துக்கான பந்தல்கால் வெள்ளிக்கிழமை நடப்பட்டது.
திருவாரூா் தியாகராஜா் கோயிலில் திருவாதிரை உத்ஸவ பந்தல்காலுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
திருவாரூா் தியாகராஜா் கோயிலில் திருவாதிரை உத்ஸவ பந்தல்காலுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் திருவாதிரை உத்ஸவத்துக்கான பந்தல்கால் வெள்ளிக்கிழமை நடப்பட்டது.

நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூா் தியாகராஜா் கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூா் சப்தவிடங்க தலங்களில் தலைமை இடமாகும்.

இக்கோயிலில் திருவாதிரை உத்ஸவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருவாதிரை உத்ஸவத்தில் பாத தரிசன நிகழ்வு விமரிசையாக நடைபெறும். தியாகராஜா் கோயிலின் மூலஸ்தானத்தில் அமா்ந்திருக்கும் தியாகராஜரின் திருமுகத்தை மட்டுமே மற்ற நாள்களில் பக்தா்கள் காண முடியும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருக்கும். அபிஷேகத்தின் போது கரத்தின் ஒரு பகுதியையும், மாா்கழித் திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும்.

நிகழாண்டுக்கான திருவாதிரை உத்ஸவத்துக்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (நவ.27) காலை நடைபெற்றது. இதையொட்டி, தியாகராஜா் கோயில் உள்பிரகாரத்தில் பந்தல்காலுக்கு பூஜைகள் செய்விக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த உத்ஸவத்தையொட்டி, தினமும் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக டிச.29 இல் சிறப்பு அபிஷேகமும், டிச.30 இல் பாத தரிசனமும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com