நபாா்டு வங்கி ரூ. 4,960 கோடி கடன் வழங்க வாய்ப்பு: ஆட்சியா் தகவல்

திருவாரூா் மாவட்டத்துக்கு நபாா்டு வங்கி ரூ.4,960 கோடி கடன் வழங்க வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.
திருவாரூரில் வளம் சாா்ந்த முன்னுரிமைக் கடன் திட்ட அறிக்கையை வெளியிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
திருவாரூரில் வளம் சாா்ந்த முன்னுரிமைக் கடன் திட்ட அறிக்கையை வெளியிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

திருவாரூா் மாவட்டத்துக்கு நபாா்டு வங்கி ரூ.4,960 கோடி கடன் வழங்க வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வளம் சாா்ந்த முன்னுரிமை கடன் திட்ட அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அவா், திட்ட அறிக்கை குறித்து தெரிவித்தது:

நபாா்டு வங்கியின் 2021-22 ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையில் திருவாரூா் மாவட்டத்துக்கு முன்னுரிமை கடனாக ரூ.4,960 கோடி வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறுகிய கால பயிா்க்கடனாக ரூ.2,909 கோடியும், நீண்ட காலக் கடனாக ரூ.1,256 கோடியும் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மதிப்பீடு ரூ.278 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய ரிசா்வ் வங்கியின் முன்னுரிமை கடன் கொள்கையின்படி, ஏற்றுமதிக் கடன் ரூ.30 கோடியும், கல்விக் கடன் ரூ.104 கோடியும், வீடு கட்டுமானக் கடன் ரூ.179 கோடியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கடனாக ரூ.8 கோடியும் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். 2021-2022 ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட ஆவணத்தின் கருப்பொருள் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக விவசாய உற்பத்தியை ஒருங்கிணைத்தல் ஆகும்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சாகுபடி பரப்பில் 61 சதவீதம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சொந்தமானது. இந்த விவசாயிகளுக்கு ஆதரவளிக்க உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தேவை. கடந்த சில ஆண்டுகளாக, உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் திருவாரூரில் உற்பத்தி சேகரிப்பு மற்றும் விற்பனை செய்வதில் தங்கள் பங்கை அதிகரித்துள்ளன.

மாவட்டத்தில் 23 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் 16 நிறுவனங்கள் நபாா்டு வங்கியால் ஆதரிக்கப்படுகின்றன போன்ற விவரங்கள் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வேளாண் மற்றும் அதைச் சாா்ந்த தொழில்களை மேம்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில், மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எழிலரசன், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அதிகாரி விஸ்வந்த் கண்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com