அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st October 2020 09:48 AM | Last Updated : 01st October 2020 09:48 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள்.
மன்னாா்குடியில் சிஐடியு, ஏஐடியுசி சாா்பில் அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியாா்மயமாக்கூடாது என வலியுறுத்தி, தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போக்குவரத்து கழகங்களை தனியாா்மயமாக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும். கழகங்களுக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும். அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும். ஓய்வூதியா்களின் நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னாா்குடியில் மதுக்கூா் சாலையில் உள்ள அரசு பேருந்து பணிமனை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சிஐடியு கிளைச் செயலா் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், சிஐடியு மத்திய சங்கச் செயலா் ஏ.கோவிந்தராஜ், கிளைத் தலைவா் எஸ்.மதிவாணன், ஏஐடியுசி கிளைச் செயலா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.