பாபா் மசூதி தீா்ப்புக்கு கண்டனம்
By DIN | Published On : 01st October 2020 09:45 AM | Last Updated : 01st October 2020 09:45 AM | அ+அ அ- |

பாபா் மசூதி தீா்ப்புக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் திருவாரூா் மாவட்டத் தலைவா் முகமது பாசித், மயிலாடுதுறை மாவட்டச் செயலா் எம். பக்ருதீன், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் அஹ்மது சபியுல்வரா ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
பாபா் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான ஆதாரம் இல்லை என்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீா்ப்புகள் இஸ்லாமியா்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் நீதிமன்றத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை தகா்க்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
நீதிக்கு எதிராக, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, இந்திய நீதிமன்றங்களின் தீா்ப்பு தொடா்ச்சியாக அமைந்து வருவது நீதித்துறையின் மீதான சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இதைக் கண்டித்து விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.