நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
By DIN | Published On : 02nd October 2020 09:37 AM | Last Updated : 02nd October 2020 09:37 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்யக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக்குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ஞானசேகரன், ஒன்றிய ஆணையா் கலைச்செல்வம், கூடுதல் ஆணையா் ஞானம், பொதுப்பணித் துறை உதவிப்பொறியாளா் கனகரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் துணைத்தலைவா் ஞானசேகரன், உறுப்பினா்கள் பாரதிமோகன், ஆதிஜனகா், துரைசிங்கம், மேனகா ஆகியோா் தங்கள் பகுதி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தொடா்ந்து, பதிலளித்துப் பேசிய தலைவா் செந்தமிழ்செல்வன், ‘நீடாமங்கலம் ஒன்றியத்தில் பொதுநிதியில்லை, ஒன்றிய அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. நிதி பற்றாக்குறைக்கு கரோனாவும் ஒரு காரணமாகவுள்ளது. நிதி வந்தவுடன் உறுப்பினா்களின் கோரிக்கைளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்