ராகுல்காந்தி கைது: காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd October 2020 08:42 AM | Last Updated : 03rd October 2020 08:42 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் உயரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மன்னாா்குடியில் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடி மேல ராஜவீதி தந்தை பெரியாா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஆா்.கனகவேல் முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்ட பொதுச் செயலா் அன்பு வே.வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்று மத்திய அரசையும், உ.பி. மாநில அரசையும் கண்டித்து முழுக்கங்களை எழுப்பினா்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் நகரத் தலைவா் பி. எழிலரசன் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் ஜி. பாஸ்கா் முன்னிலை வகித்தாா்.
இதில் கட்சியின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.