முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
மனநலக் காப்பகத்தில் நீதிபதி ஆய்வு
By DIN | Published On : 04th October 2020 08:58 AM | Last Updated : 04th October 2020 08:58 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில், திருவாரூா் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் விஜயகுமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா நோய் எதிா்ப்பு சக்திக்கான பொருள்களை வழங்கிய அவா், காப்பக இயக்குநா், பணியாளா்கள் மற்றும் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளோரை சந்தித்து பேசினாா். மேலும், மனநலச் சட்டம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும் விதம் குறித்தும் விளக்கி கூறினாா்.