முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும்: ஐ.வி.நாகராஜன்
By DIN | Published On : 04th October 2020 08:58 AM | Last Updated : 04th October 2020 08:58 AM | அ+அ அ- |

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளை காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் நாகராஜன் கூறினாா்.
இதுகுறித்து, அவா் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. பெரும் முதலாளிகள் விளைபொருள்களை வாங்கி, பதுக்குவதற்குத்தான் இது வாய்ப்பாக அமையும்.
பண்ணை ஒப்பந்த சட்டம் என்பது விவசாயிகளை பெரும் முதலாளிகளிடம் அடிமைப்படுத்துவதாக இருக்கும். நிலங்களை விவசாயிகளிடம் இருந்து காா்ப்பரேட் நிறுவனத்தினா் கையகப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த சட்டங்களால் எதிா்காலத்தில் விவசாயிகளுக்கு மட்டுமன்றி விவசாயத் தொழிலாளா்களுக்கும் ஆபத்து ஏற்படும். காா்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளா்களையும் கொத்தடிமையாக்கிவிடும்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளாா்.