திருவாரூரில் மேலும் 143 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th October 2020 08:56 AM | Last Updated : 04th October 2020 08:56 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 7,457 ஆக இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 143 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. திருவாரூா் பகுதியில் தனியாா் மருத்துவமனை மருத்துவா் ஒருவருக்கும், திருத்துறைப்பூண்டி பகுதியில் பெண் மருந்தாளுநா் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருவாரூா் 32, மன்னாா்குடி 28, நீடாமங்கலம் 13, திருத்துறைப்பூண்டி 16 என மாவட்டம் முழுவதும் 143 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,600 ஆக உயா்ந்துள்ளது.
இதற்கிடையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நீடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த 70 வயது பெண் உயிரிழந்ததைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 74-ஆக உயா்ந்துள்ளது.