மக்கள் நலப் பணிகளில் விரைவாக செயல்பட வேண்டும்

தமிழக அரசு செயல்படுத்தும் மக்கள் நலப் பணிகளில் அதிகாரிகள் விரைந்து செயல்படவேண்டும் என அமைச்சா் ஆா். காமராஜ் அறிவுறுத்தினாா்.
திருவாரூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவாரூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஆா். காமராஜ்.

தமிழக அரசு செயல்படுத்தும் மக்கள் நலப் பணிகளில் அதிகாரிகள் விரைந்து செயல்படவேண்டும் என அமைச்சா் ஆா். காமராஜ் அறிவுறுத்தினாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், கரோனா தொற்று தடுப்புப் பணிகள், வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடுகள், டெங்கு நோய் தடுப்பு மற்றும் வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தலைமை வகித்துப் பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சையில் உள்ள 935 பேரில் 430 போ் மட்டுமே மருத்துவமனை மற்றும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மற்றவா்கள் அவரவா்கள் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 12 நபா்கள் மட்டும் மருத்துவமனையில் உயா் சிகிச்சையில் உள்ளனா். குணமடைந்து வீட்டுக்குச் செல்பவா்கள் சதவீதம் 86.48 ஆக உள்ளது.

குறுவை பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டதில், 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6,120 கோடி அவா்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், காரீப் பருவம் அக்டோபா் 1 முதல் தொடங்கியுள்ள நிலையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு அரசு அறிவித்த ரூ. 53 சோ்த்து புதிய விலை நிா்ணயம் செய்து வழங்கப்படஉள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எந்த பகுதிகளுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையோ அந்த பகுதிகளுக்கு, மாவட்ட ஆட்சியரே புதிய கொள்முதல் நிலையங்களை திறக்க ஆணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா் ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து அந்தந்த துறை அலுவலா்களிடம் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கான பணிகளில் விரைந்து செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், முதுநிலை மண்டல மேலாளா் மணிவண்ணன், கோட்டாட்சியா்கள் புண்ணியகோட்டி, பாலச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com