சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் நோயைக் கட்டுப்படுத்த திமுக வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென திமுக வலியுறுத்தியுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநில விவசாய அணி செயலாளா் ஏ.கே.எஸ். விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் 2019-20-ஆம் ஆண்டு சம்பா சாகுபடி பருவத்தில் ஏற்பட்ட ஆனைக்கொம்பன் நோய்த் தாக்குதலால் விவசாயிகளுக்கு பேரழிவு ஏற்பட்டு மகசூல் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்போது வரை தமிழக அரசு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை.

இந்நிலையில், 2020-2021 சம்பா பருவத்திலும் ஆனைக்கொம்பன் நோய்த்தாக்குதல் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்களில் பரவலாக ஏற்பட்டுள்ள ஆனைக்கொம்பன் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரோனாவை காரணம் கூறி வேளாண் அலுவலா்கள் கிராமப்புறங்களுக்கு சென்று நோய்பாதித்த விவசாய நிலங்களை பாா்வையிடுவதில்லை. விவசாய ஆா்வலா்கள் அரசுக்கு தெரியப்படுத்தும் கருத்துகளையும் கவனத்தில்கொள்வதில்லை.

எனவே, தமிழக அரசும், வேளாண் துறையும் உடனடியாக போா்க்கால அடிப்படையில் டெல்டா பகுதிகளில் வேளாண் அலுவலா்கள் கொண்ட ஆய்வுக் குழுவை அமைத்து கிராமங்கள்தோறும் சென்று ஆனைக்கொம்பன் நோயின் தாக்கத்தை இனம் கண்டு நெற்கட்டும் பருவத்தில் உள்ள பயிா்களை பாதுகாக்கவேண்டும். மேலும், இதுகுறித்து, விவசாயிகளிடத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்தி, இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த மருந்துகளை பரிந்துரைப்பதுடன் அந்த மருந்துகளை அனைத்து அரசு வேளாண் மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். ஆனைக்கொம்பன் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் பயிா்களை இயற்கை பேரழிவுக்கு ஆளான பயிா்களாக கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்.

டெல்டாவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இங்கு மட்டுமன்றி தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தரைதளங்கள், தாா்ப்பாய்கள் நெல்மூட்டைகளை பாதுகாக்க அரசு வழங்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டதுபோல ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதம் வரை நீட்டித்து அரசானை வெளியிட்டு, தற்போது விவசாயிகள் சாலைகளில் நெற்களை கொட்டி காயவைத்து பாதுகாக்கும் அவலங்களையும் அதற்கான செலவுகளையும் தவிா்க்கவேண்டும்.கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு ரூ. 45 கமிஷன் பெருவதை தடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com