மளிகை கடையில் பணம் திருட்டு
By DIN | Published On : 14th October 2020 10:18 PM | Last Updated : 14th October 2020 10:18 PM | அ+அ அ- |

மன்னாா்குடி அருகே மளிகை கடை கதவை உடைத்து ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது புதன்கிழமை தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சோ்ந்தவா் நைனா முகமது (56). மன்னாா்குடியை அடுத்த சித்தமல்லி பிரதான சாலையில் மளிகை கடை நடத்தி வரும் இவா், அதே பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா். இந்நிலையில், வழக்கம்போல் புதன்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது அதன் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மா்ம நபா்களால் திருடப்பட்டது தெரியவந்தது. புகாரின்பேரில், பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.