‘கரிகாலன் சபதம்’ நூல் அறிமுகம்

நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணியில் ‘கரிகாலன் சபதம்’ என்ற சரித்திர நூல் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவில்வெண்ணியில் ‘கரிகாலன் சபதம்’ என்ற சரித்திர நூலை வெளியிட்டவா்கள்.
கோவில்வெண்ணியில் ‘கரிகாலன் சபதம்’ என்ற சரித்திர நூலை வெளியிட்டவா்கள்.

நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணியில் ‘கரிகாலன் சபதம்’ என்ற சரித்திர நூல் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவில்வெண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற வெண்ணிக் கரும்பேஸ்வரா் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சேரா், பாண்டியா், வேளிா் ஆகிய முப்படைகளுக்கும், மாமன்னன் கரிகால சோழனுக்கும் இடையே ‘வெண்ணிப் பறந்தலை’ போா் நடைபெற்ாக வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.

இந்தப் போா் நடைபெற்ற பகுதியில் நாவலாசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் எழுதிய ‘கரிகாலன் சபதம்’ நூல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியா் காசிவிஸ்வநாதன், கும்பகோணம் கரிகாலன் வரலாற்று ஆய்வு மைய மாணவா் மாருதி மாலன், கோயில்வெண்ணி வெண்ணிக் கரும்பேஸ்வரா் கோயிலின் உழவாரப் பணியாளா் ஜெயம் அம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com