பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரிக்கை

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை விரைந்து விசாரித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் அணி செயற்குழு கூட்டம்.
திருவாரூரில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் அணி செயற்குழு கூட்டம்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை விரைந்து விசாரித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் அணி செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பாயிஜா ஷபீக்கா தலைமை வகித்தாா்.

பாலியல் கொலை வழக்குக்கு பொறுப்பேற்று உத்தர பிரதேச முதல்வா் பதவி விலக வேண்டும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை விரைந்து விசாரித்து கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மகளிா் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் சமிமா பேகம், மாவட்ட பொருளாளா் நஜ்மா பேகம், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பரிதா பேகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com