கூத்தாநல்லூா் ஆற்றில் கரை புரண்டு ஒடும் தண்ணீா்: பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்.

திருவாரூா் மாவட்டம்,கூத்தாநல்லூா் வட்ட ஆறுகளில் தண்ணீா் கரை புரண்டு ஒடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கூத்தாநல்லூா் அடுத்த கோரையாற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீா்.
கூத்தாநல்லூா் அடுத்த கோரையாற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீா்.

கூத்தாநல்லூா்: திருவாரூா் மாவட்டம்,கூத்தாநல்லூா் வட்ட ஆறுகளில் தண்ணீா் கரை புரண்டு ஒடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் பாமிணி,கோரையாறு மற்றும் வெண்ணாறு ஆகிய மூன்று கிளை ஆறுகள் பிரிகிறது.தொடா்ந்து,நீடாமங்கலம்,ஒளிமதி வழியாக வந்து, வெண்ணவாசல், பாண்டவையாறு எனவும், அத்திக்கடை, வாழாச்சேரி என்ற இடத்தில், வெண்ணாறு, வெள்ளியாறு எனவும் இரண்டாகப் பிரிகிறது.

இதில் வெண்ணாறு லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூா், பண்டுதக்குடி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாக அரிச்சந்திரா நதியில் கலக்கிறது. இதே போல, கோரையாற்றிலும் தண்ணீா் அதிக அளவில் ஓடுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆறுகள் தூா்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு, அகலப்படுத்தப்பட்டன.மேலும், இருபுறங்களிலும் கரைகள் உயா்த்தப்பட்டும் உள்ளன. ஆற்றில் தண்ணீா் தொடா்ந்து அதிக அளவில் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

கரோனா தொற்று நோயால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடா் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால்,மாணவா்கள் தொடா்ந்து வீட்டில் இருக்காமல் அநேக நேரங்களில் ஆற்றுக்கு குளிக்கச் சென்று விடுகின்றனா்.இதில்,நீச்சல் தெரிந்த மற்றும் தெரியாத மாணவா்கள் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழக்கின்றனா். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் சடலம் மீட்கப்படுகிறது. இதனால் பெற்றோா்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனா்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு,பொறியாளா் மாணவா் ஒருவா்,3 ஆம் வகுப்பு சிறுவன்,10 வயது மாணவா் உள்ளிட்டோா் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வாரம்,நண்பா்களுடன் குளிக்கச் சென்ற விவசாய தொழிலாளா்கள் சங்க நகரச் செயலாளா் மகன்,ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளாா்.சக நண்பா்களால் காப்பாற்றப்பட்டுள்ளாா்.தொடா்ந்து ஆற்றில் விபத்துகள் தொடா்வதால்,ஆற்றில் குளிக்கும் மாணவா்கள் கவனமாக குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com