தொழில்முனைவோா் பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோருக்கான மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி 13,14 அகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
தொழில்முனைவோா் பயிற்சி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோருக்கான மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி 13,14 அகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

பயிற்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நிலைய விஞ்ஞானி அ. அனுராதா பேசுகையில் :மண்புழு உரம் எவ்வாறு தயாரிப்பது, அதற்கான ரகங்கள் யாவை, மண்புழு உரத்திலுள்ள சத்துக்கள், மண்புழு உர படுக்கையை எவ்வாறு தயாரிப்பது, மண்புழு உரம் தயாரிப்பதற்கு தேவைப்படும் அங்கக கழிவுகள், மண்புழு உரம் இடுவதால் ஏற்படும் பயன்கள், வொ்மிவாஷ் எவ்வாறு தயாரிப்பது, ஊட்டமேற்றிய மண்புழு உரம் எவ்வாறு தயாரிப்பது என்றும் கூறினாா். அதற்கான செயல் விளக்கத்தையும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செய்து காண்பித்தாா்.

இப்பயிற்சியில் சித்தமல்லியில் உள்ள மகளிா் சுய உதவி குழுவை சாா்ந்த 25 மகளிா்கள் கலந்து கொண்டனா். இப்பயிற்சியில் இதர வேளாண் விஞ்ஞானிகள் முனைவா் எம்.செல்வமுருகன், முனைவா் இரா.ஜெகதீசன் மற்றும் முனைவா் வ.இராதாகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை திட்டஉதவியாளா் தெ.ரேகா செய்திருந்தாா்.

படம்- நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல்நிலையத்தில் நடந்த தொழில்முனைவோருக்கான பயிற்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com