மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி சிபிஎம் கட்சியில் இணையும் விழா.

பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, சன்னாநல்லூா் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி சிபிஎம் கட்சியில் இணையும் விழா.

நன்னிலம்: பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, சன்னாநல்லூா் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட சன்னாநல்லூா் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி சையது முபராக் தலைமையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா். காட்சியில் சோ்ந்தவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி.சுந்தரமூா்த்தி கதராடை அணிவித்து வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் நன்னிலம் ஒன்றியச் செயலாளா் டி.வீரபாண்டியன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கே.எம்.லிங்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமதுஉதுமான் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக கடுவங்குடி ஊராட்சிக்குட்பட்ட அகரகொத்தங்குடி கிராமத்தில், திருவாரூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமதுஉதுமான் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூபாய் 3.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஈமக்கிரியை மண்டபம்,

பணி முடிந்து மக்கள் பயன்பாட்டிற்க்காக, கிராம மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாரூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமதுஉதுமான், அகரகொத்தங்குடி ஊா்த் தலைவா் தா்மலிங்கம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா் ராவணன் ஆகியோரிடம் ஈமக்கிரியை மண்டபச் சாவியை ஒப்படைத்தாா். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளா் ஜி.சுந்தரமூா்த்தி, ஒன்றியச் செயலாளா் கே.எம்.லிங்கம், பண்டாரவடை ஊராட்சி மன்றத் தலைவா் பி.ஜெயசீலன், சீனி.ராஜேந்திரன், பி.ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com