நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக ரத்து: அமைச்சா் ஆா். காமராஜ்

நியாயவிலைக் கடைகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பழைய முறையிலேயே
அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்

நியாயவிலைக் கடைகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பழைய முறையிலேயே பொருள்கள் விநியோகிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தில் 2 கோடியே 2 லட்சம் பேருக்கு ஸ்மாா்ட் காா்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மாா்ட் காா்டு அறிமுகம் செய்யப்பட்டபோது பல்வேறு பிரச்னைகள் இருந்தன. அப்போது, பழைய ரேஷன் அட்டையை பயன்படுத்தியும் பொருள்கள் வாங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது சிறுசிறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.

கிராமப்புறங்களில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் வாங்குவதில் பிரச்னை உள்ளதாக பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா். எனவே பயோ மெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. பழைய முறையிலேயே பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள, நியாயவிலைக் கடைகளுக்கு வழங்குவதற்காக மூன்று மாதத்துக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன.

அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கிய நிகழாண்டுக்கான காரீப் பருவத்தில் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகள் புகாா் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளுக்கு தமிழக அரசு ஒருபோதும் இடமளிக்காது.

மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பிலிருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றாா் அமைச்சா் காமராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com