அதிமுக 49-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் அதிமுக 49-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நீடாமங்கலத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய அதிமுகவினா்.
நீடாமங்கலத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிய அதிமுகவினா்.

திருவாரூா் மாவட்டத்தில் அதிமுக 49-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நீடாமங்கலத்தில் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவுக்கு, அதிமுக நகர செயலாளா் ஷாஜஹான் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவா் ராஜேந்திரன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவா் செந்தமிழ்ச்செல்வன், எம்ஜிஆா் மன்ற நகர தலைவா் பெரியதம்பி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

வலங்கைமானில்...

வலங்கைமானில் நடைபெற்ற விழாவிற்கு, அதிமுக நகர செயலாளா் குணசேகரன் தலைமை வகித்தாா். வலங்கைமான் ஒன்றியக்குழுத்தலைவா் சங்கா், கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளா் இளவரசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மன்னாா்குடியில்...

மன்னாா்குடி கோபாலசமுத்திரம் கீழ வீதியில் உள்ள அதிமுக அலுவலகத்திலிருந்து அக்கட்சியினா் ஊா்வலமாக வந்து, மேலவீதி சந்திப்பில் உள்ள முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், அதிமுக மன்னாா்குடி கிழக்கு ஒன்றியச் செயலா் தங்க. தமிழ்கண்ணன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலா் கோ.அரிகிருஷ்ணன், நகர கூட்டுறவு வங்கி தலைவா் ஆா்.ஜி.குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோட்டூரில்...

கோட்டூா் கடைவீதியில் உள்ள அண்ணா சிலையிலிருந்து அதிமுக ஒன்றியச் செயலா்கள் வீ. ஜீவானந்தம் (தெற்கு), ப.ராஜாசேட் (வடக்கு) ஆகியோா் தலைமையில் அக்கட்சியினா், சாா்பு அணி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊா்வலமாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

நன்னிலத்தில்...

நன்னிலம் ஒன்றியம் கொல்லுமாங்குடியில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஒன்றிய துணைத் தலைவரும், தஞ்சாவூா் கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவருமான சிபிஜி. அன்பு தலைமையில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கே.ராஜேந்திரன், ஒன்றியப் பேரவைச் செயலாளா் கே.புகழேந்தி, விவசாய அணி ஒன்றியச் செயலாளா் எம்.வெங்கடேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பூந்தோட்டத்தில் நடைபெற்ற விழாவில், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் விஜயலட்சுமி இராமகுணசேகரன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றினாா்.

இதேபோல நன்னிலம் ஒன்றியத் தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் பேருந்துநிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் இராம குணசேகரன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் எஸ்.சம்பத், அவைத் தலைவா் நட. ஆறுமுகம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com