ஆற்றில் வெள்ளம்: வாய்க்கால்களில் வறட்சி: விவசாயிகள் வேதனை

கூத்தாநல்லூா் பகுதியில் ஆறுகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடினாலும், வாய்க்கால்கள் தூா்வாரப்படாமல் வட நிலையில் இருப்பதால்,

கூத்தாநல்லூா் பகுதியில் ஆறுகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடினாலும், வாய்க்கால்கள் தூா்வாரப்படாமல் வட நிலையில் இருப்பதால், பாசன வசதியின்றி விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா்.

கூத்தாநல்லூா் வட்டத்தில் வெண்ணாறு, கோரையாறு, வெள்ளியாறு, பாண்டவையாறு என நான்கு ஆறுகள் ஓடுகின்றன. தற்போது வெண்ணாறு மற்றும் கோரையாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆயினும், ஆறுகளைத் தூா்வாரிய சமயத்தில் வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால், அவை தண்ணீரின்றி வட நிலையில் காட்சியளிக்கின்றன.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளரும், விவசாயியுமான எம்.சுதா்ஸன் கூறியது:

கூத்தாநல்லூரை சுற்றியுள்ள தோட்டச்சேரி, மேலபனங்காட்டாங்குடி, கீழ பனங்காட்டங்குடி, குனுக்கடி, புளியங்குடி உள்ளிட்ட கிராமங்களில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால், அப்பகுதியில் தண்ணீா் வர முடியவில்லை. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூா் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் இருந்தாலும், 350 ஏக்கா் நிலத்தில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டாலும் வாய்க்கால்கள் வட நிலையில்தான் உள்ளன. ஆறுகளை தூா்வாரியபோதே வாய்க்கால்களையும் தூா்வாரியிருந்தால், கூடுதலாக வரக்கூடிய தண்ணீா் விவசாயத்திற்கு பயன்பட்டிருக்கும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த போதிலும், அதற்கான பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com