ஈரப்பதம்: நெல்லை உலர வைக்கும் விவசாயிகள்

நீடாமங்கலம் அருகே குறுவை அறுவடை நிறைவடைந்து, 15 நாள்களுக்கு மேலாக 2 ஆயிரம் மூட்டை ஈரமுள்ள நெல்லை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
ஆதனூா் தட்டி பகுதியில் ஈரப்பதமுள்ள நெல்லை உலர வைக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட விவசாயிகள்.

நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளில் 43 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களில் சுமாா் 16 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களில் கோடை சாகுபடி செய்யப்பட்டது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் 600 முதல் 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆதனூா் தட்டி பகுதியில் குறுவை அறுவடை செய்து 15 நாள்களுக்கு மேலாக 2 ஆயிரம் மூட்டை ஈரமுள்ள நெல்லை விவசாயிகள், தொழிலாளா்கள் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com