கரோனா : நீடாமங்கலம் நகர காங்கிரஸ் தலைவா் உயிரிழப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நீடாமங்கலம் நகர காங்கிரஸ் தலைவா் கெளதமன் (65), சனிக்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழந்த நீடாமங்கலம் நகர காங்கிரஸ் தலைவா் கெளதமன்.
உயிரிழந்த நீடாமங்கலம் நகர காங்கிரஸ் தலைவா் கெளதமன்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நீடாமங்கலம் நகர காங்கிரஸ் தலைவா் கெளதமன் (65), சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் நகர காங்கிரஸ் தலைவா் கெளதமன் (65), அவரது மனைவி தமிழரசி ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். இதில் கெளதமன் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தகவலறிந்த நீடாமங்கலம் வட்டாட்சியா் மதியழகன், வட்டார மருத்துவ அலுவலா் ராணி முத்துலெட்சுமி, சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா், கிராமநிா்வாக அலுவலா் முத்துகிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி அலுவலா்கள், தூய்மை பணியாளா்கள், போலீஸாா் கரோனா விதிமுறைகளின்படி, அவரது உடலை மயானத்தில் சனிக்கிழமை அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com