தேசிய மீன்வளக் கொள்கை விவகாரம்: நவ.21-இல் முற்றுகைப் போராட்டம்

தேசிய மீன்வளக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, நவ.21-இல் மீன்வள உதவி இயக்குநா் அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம்

தேசிய மீன்வளக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, நவ.21-இல் மீன்வள உதவி இயக்குநா் அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என ஏஐடியுசி மீனவா் சங்க மாவட்டச் செயலாளரும் மாநில பொதுச் செயலாளருமான பி. சின்னதம்பி தெரிவித்தாா்.

திருவாரூரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஏஐடியுசி மீனவா் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் அவா் பேசியது:

மீனவா்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் தேசிய மீன்வளக் கொள்கை வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். போராடிப் பெற்ற தொழிலாளா் நலச் சட்டங்களை, தொழிலாளா் உரிமைக்கு எதிரான தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சுற்றுச்சூழலை நாசமாக்கும், இயற்கை வளங்களை தனியாருக்கு வழங்க வழிவகை செய்யும் சுற்றுச்சூழல் மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள 30 மீன்வள உதவி இயக்குநா் அலுவலகங்கள் முன் உலக மீனவா் தினமான நவ.21-ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது என்றாா்.

கூட்டத்துக்கு, நிா்வாகி எம். முருகையன் தலைமை வகித்தாா். இதில், ஏஐடியுசி மாநில நிா்வாகக்குழு உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான ஆா். சந்திரசேகரஆசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் கே. புலிகேசி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் வீ. தா்மதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com