மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வலியுறுத்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகத்தின் மாநில பொதுச் செயலாளா் சே.நா. ஜனாா்த்தனன்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகத்தின் மாநில பொதுச் செயலாளா் சே.நா. ஜனாா்த்தனன்.

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகத்தின் 34-ஆம் ஆண்டு மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவா் எஸ். ரங்கநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்தில் காலியாக உள்ள 700 தொழிற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாநில ஒருங்கிணைப்பாளா் என். ரவி முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் சே.நா. ஜனாா்த்தனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.

நிகழ்ச்சியில், பணி நிறைவு பெற்ற மாநிலத் தலைவா் எஸ். ரங்கநாதன், மாநில பொருளாளா் ஏபி குமணன் மற்றும் நல்லாசிரியா் விருது, பதவி உயா்வு பெற்ற ஆசிரியா்கள் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். இதைத்தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தோ்தல் அலுவலா்களாக செந்தில்நாதன், பாண்டியன் ஆகியோா் செயல்பட்டனா்.

இதில், மாநிலத் தலைவராக வேலூா் மாவட்டத்தைச் சாா்ந்த செ.நா. ஜனாா்த்தனன், பொதுச் செயலாளராக நாகை என். ரவி, பொருளாளராக கடலூா் சேரமான் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மேலும், ஒருங்கிணைப்பாளா், அமைப்புச் செயலாளா், செய்தித் தொடா்பாளா், தணிக்கையாளா்கள், துணைத் தலைவா்கள், மகளிரணி செயலாளா், இணைச் செயலாளா் ஆகியோரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com