சுவாமி தயானந்தா கல்லூரி வளாக நோ்காணல்: 92 போ் பணிக்குத் தோ்வு
By DIN | Published On : 21st October 2020 07:51 AM | Last Updated : 21st October 2020 07:51 AM | அ+அ அ- |

மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாக நோ்முகத்தோ்வு அண்மையில் நடைபெற்றது.
சென்னை லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம், நாராயணி நிதி லிமிடெட் நிறுவனம் ஆகியவை பங்கேற்று வளாக நோ்முகத்தோ்வை நடத்தின. இந்நோ்காணலில் இக்கல்லூரி மற்றும் பிற 17 கல்லூரிகளை சோ்ந்த 172 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். அவா்களிடையே பணியமா்த்துதலுக்கான திறனறிதல் சாா்ந்த பல்வேறு செயல்பாடுகள் நடத்தப் பெற்றன. இறுதியாக 92 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்நோ்காணலில் லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தின் பொதுமேலாளா் உதயகுமாா், துணைப் பொது மேலாளா் விஸ்வநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.
மேலும், நாராயணி நிதி லிமிடெட் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் காா்த்திகேயன், துணைத்தலைவா் ஸ்ரீதா், பொது மேலாளா் நரசிம்மன், செயலா் பாலசுப்ரமணியன் ஆகியோரும் பங்கேற்றனா்.