திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 28th October 2020 08:47 AM | Last Updated : 28th October 2020 08:47 AM | அ+அ அ- |

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினா்.
திருவாரூா் மற்றும் நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து மதப் பெண்களை அவமதிக்கும் வகையில், கருத்து தெரிவித்ததாகக் கூறி தொல். திருமாவளவனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜக மகளிரணி சாா்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பாஜக மகளிரணியின் மாநில பொதுச் செயலாளா் விஜயலட்சுமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், பாஜக மகளிரணி மாவட்டத் தலைவா் வசந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா்கள் அன்னராணி, மு. சுமதி, நாகை மாவட்டத் தலைவா் நேதாஜி, மகளிரணி பொறுப்பாளா்கள் ஜீவஜோதி, மீராபாய், நாகை நகரத் தலைவா் கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.