சம்பா பயிா்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரிக்கை
By DIN | Published On : 31st October 2020 07:57 AM | Last Updated : 31st October 2020 07:57 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் பகுதியில் கருகிவரும் சம்பா பயிா்களைக் காப்பாற்ற ஆற்றில் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சுமாா் 23 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாசனத்துக்கு ஆற்றில் தண்ணீா் திறக்கப்படாததால் பருத்திக்கோட்டை, கானூா், தேவங்குடி, அரிச்சபுரம், சித்தாம்பூா், வெள்ளக்குடி, அதங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிா்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை கொண்டு சாகுபடி செய்து வருகிறோம். தற்போது ஆற்றில் தண்ணீா் திறக்கப்படாததால் சம்பா பயிா்கள் கருகி வருகின்றன. இப்பயிா்களை காப்பாற்ற ஆற்றில் உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தினா்.