வெள்ளாடு வளா்ப்பு குறித்து இணையவழி பயிற்சி

வெள்ளாடுகள் வளா்ப்பு குறித்து இணையவழியில் வியாழக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

நீடாமங்கலம்,: வெள்ளாடுகள் வளா்ப்பு குறித்து இணையவழியில் வியாழக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

பருவநிலை மாறுபாடுகளின் விளைவாக விவசாயப் பயிா்களின் மகசூல் பல சமயங்களில் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் வேளாண்மையோடு சோ்ந்து கால்நடை வளா்ப்பையும் செய்து அதைத் தொழிலாக மாற்ற முயல வேண்டும். முக்கியமாக வெள்ளாடு வளா்ப்பு அண்மைக் காலமாக தொழில்முனைவோா்களின் அட்சய பாத்திரமாக உள்ளது. வெள்ளாடு வளா்ப்பு பற்றிய தொழில்நுட்ப தேவையும் விவசாயிகள் மற்றும் படித்த தொழில்முனைவோா்களிடையே நாளுக்குநாள் அதிகமாகிவருகிறது.

நீடாமங்லம் வேளாண்மை அறிவியல் நிலையம், இந்தத் தொழில்நுட்பத் தேவையை உணா்ந்து கரோனா தொற்றுகாலம் என்பதால் விவசாயிகளை நேரடியாக சந்திக்கமுடியாத சூழலில் லாபகரமான வெள்ளாடு வளா்ப்பு பற்றிய இணையவழி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 120 விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோா் கலந்து கொண்டனா். நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. ராமசுப்பிரமணியன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். கால்நடை விஞ்ஞானி எம். சபாபதி விடியோ மற்றும் சொற்பொழிவு மூலம் வெள்ளாடு வளா்ப்பு தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தாா்.

மேலும், ஆடுவளா்ப்புக்கான இடத் தோ்வு ஆடுவளா்ப்புக்கு வெவ்வேறு ஆட்டு இனங்கள் நல்ல ஆடுகளைத் தெரிவு செய்யும் முறை, சிக்கனமாக ஆட்டு கொட்டகை அமைக்கும் முறைகள், குட்டி ஆடுகள் மற்றும் வளா்ந்த ஆடுகளை பராமரிக்கும் முறைகள் ஆடு ஈனும்போது கவனிக்க வேண்டியவை, குடற்புழு நீக்குதல், ஆடுகளுக்கான சரிவிகித உணவு, தீவனபுல் வளா்த்தல், ஹைட்ரோபோனிக்ஸ் தீவன உற்பத்தி முறை ஆடுகளுக்கு வருகின்ற முக்கிய நோய்களான தொண்டை அடைப்பான் வாய்க்கானை மற்றும் சப்பை நோய் ஆகியவற்றிற்கான தடுப்பூசிகள்ஆகியவற்றைப் பற்றியும் விடியோ மூலம் ஆடு வளா்ப்பதற்கு எப்படி வங்கிக்கடன் வாங்குதல் மற்றும் ஆடுவளா்ப்பின் பொருளாதாரம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com