கால்நடை சிகிச்சை முகாம்
By DIN | Published On : 05th September 2020 11:49 PM | Last Updated : 05th September 2020 11:49 PM | அ+அ அ- |

ராயபுரம் கிராமத்தில் நடைபெற்ற கால்நடை சிகிச்சை முகாம்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில், ராயபுரம் கிராமத்தில் கால்நடை சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற முகாமில், நிலைய கால்நடை மருத்துவா் மு. சபாபதி கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தாா். இதில், 200-க்கும் அதிகமான ஆடு, மாடுகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சையளிக்கப்பட்டு சத்து டானிக் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை, பால்குறைவு, ஒவ்வாமை போன்ற நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, முதுநிலை ஆராய்ச்சியாளா் விஜிலா செய்திருந்தாா்.