விடுபட்ட கிராமங்களுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th September 2020 11:34 PM | Last Updated : 07th September 2020 11:34 PM | அ+அ அ- |

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட விவசாயிகளுக்கு 2019- 2020- ஆம் ஆண்டிற்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையாக ரூ. 201 கோடியை வேளாண் காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள 573 வருவாய் கிராமங்களில் 370 கிராமங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கி இருக்கிறது. எஞ்சிய 213 கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை.
இதைத் கண்டித்தும், விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரியும் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் ஜி. சேதுராமன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் திரளாக பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.