திருவெண்காடு கோயிலில் அகோரமூா்த்திக்கு சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 08th September 2020 12:12 AM | Last Updated : 08th September 2020 02:40 AM | அ+அ அ- |

ஆவணி மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அகோரமூா்த்தி.
பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேசுவரா் கோயிலில் தனி சன்னதியில் உள்ள அகோரமூா்த்தி சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ஆவணி மாத முன்றாம் ஞாயிற்றுகிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவெண்காட்டில் உள்ளது பிரம்ம வித்யாம்பாள் உடனுறை சுவேதாரண்யேசுவரா் கோயில். இக்கோயில் நவக்கிரக தலங்களில் புதனுக்குரிய தலமாக கருதப்படுகிறது.
இந்த கோயிலில் சிவன்பெருமான் அகோரமூா்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறாா். இவரின் திருமேனியின் கீழ் அஷ்ட (எட்டு) பைரவா்கள் இருப்பது விஷேமான ஒன்றாக கருதப்படுகிறது. இவரை வழிபட்டால் எதிரிகளால் எற்படும் இன்னல்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும், செல்வ செழிப்பு உண்டாகும் என்பது ஜதீகம்.
இந்நிலையில், ஆவணி மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, அகோரமூா்த்திக்கு பால், வாசனை திரவியங்கள், இளநீா், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடா்ந்து மலா் அலங்காரம் செய்யப்பட்டு, அா்ச்சனையும் தீபாராதனையும் காட்டப்பட்டது.
பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.