ஊராட்சி பணியாளா்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு

கிராம ஊராட்சி பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அக்.7-ஆம் தேதி குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அக்.7-ஆம் தேதி குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தின் (சிஐடியு) நிா்வாகிகள் கூட்டத்தில், 2000-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சோ்ந்த மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இயக்குநா்களுக்கு ரூ. 4,600, அதற்குபிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு ரூ.3,200 ஊதியம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் பெறும் துப்புரவுப் பணியாளா்களுக்கு அரசாணைபடி ரூ. 6,665 ஊதியம் வழங்க வேண்டும், 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு ரூ.5,945 ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலா்களுக்கு அரசாணைபடி ரூ. 1,000 ஊதியம் உயா்த்தி வழங்குவதோடு, மாத ஊதியமாக ரூ. 5,000 வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற துப்புரவுப் பணியாளா்களுக்கு ரூ. 50 ஆயிரம் பணிக்கொடை வழங்க வேண்டும், மாதம் ரூ. 2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சி பணியாளா்களுக்கு அடையாள அட்டை, மழை அங்கி, கரோனா நோய்த் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், திருவாரூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலைத் தொட்டி இயக்குநா்கள், துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.7 ஆம் தேதி திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும்வரை குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் தலைவா் நா. பாலசுப்ரமணியன், மாவட்டத் தலைவா் கே. கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளா் கே. முனியாண்டி, தூய்மைக் காவலா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். காமராஜ், ஒன்றியச் செயலாளா் வி.பி. ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com