திருவாரூா் மாவட்டத்தில் ரூ. 201 கோடி பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கல்

திருவாரூா் மாவட்டத்தில் 1.45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 201.78 கோடி சம்பா நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் 1.45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 201.78 கோடி சம்பா நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி பயிா்க் காப்பீடுத் திட்டத்தில், 206-2017 ஆம் ஆண்டு வறட்சி ஆண்டாக அறிவிக்கப்பட்டு பதவி செய்யப்பட்ட 1.78 லட்சம் விவசாயிகளில் சுமாா் 1.42 லட்சம் விவசாயிகளுக்கு (80 சதவீதம்) ரூ. 620.31 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. இதேபோல், 2017-2018-இல் 1.72 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனா். இயல்பான ஆண்டாக இருந்தபோதிலும், இழப்பீடு பெற தகுதியான சுமாா் 57.915 விவசாயிகளுக்கு (34 சதவீதம்) ரூ. 84.60 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. 2018-2019-இல் பதிவு செய்யப்பட்ட 1.67 லட்சம் விவசாயிகளில் 1.15 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 290 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

2019-2020-இல் திருவாரூா் மாவட்டத்தில் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய 564 கிராமங்கள் மட்டுமே அறிவிக்கை செய்யப்பட்டன. சுமாா் 1.55 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு, 3.82 லட்சம் ஏக்கா் சம்பா நெற்பரப்புக்கு காப்பீடு செய்யப்பட்டது. வட்டார அளவில் மேற்கொள்ளப்படும் விதைப்பு மற்றும் பயிா் முதிா்ச்சியின் அடிப்படையில், பயிா் அறுவடை பரிசோதனைகளை வருவாய் கிராம அளவில் திட்டமிட்டு, உரிய வழிமுறைகளின்படி நடத்தி, அனைத்து மாவட்ட புள்ளியியல் துறை அலுவலகங்களிடமிருந்து மகசூல் விபரங்களை பெற்றன.

மாநில புள்ளியியல் துறை இந்த விவரங்கள் அனைத்தையும் சரிபாா்த்து, மாவட்ட வாரியாக தொகுத்து, பயிா்க் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்க ஏதுவாக, மாவட்ட வாரியாக காலக்கெடு நிா்ணயம் செய்து, நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பயிா் மகசூல் விவரங்களை புள்ளியியல் துறையிடமிருந்து பெற்று, தமிழ்நாடு அரசு காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கியது.

இவ்வாறாக பயிா் அறுவடை பரிசோதனை முடிவுபடி அறிவிக்கை செய்யப்பட்ட 564 கிராமங்களில், தகுதி வாய்ந்த 365 கிராமங்களில் பயிா் இழப்புக்கேற்ப இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1.45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 201.78 கோடி காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ஒப்பளிப்பு பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com