மின்மயானத்தை திறக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 10th September 2020 10:00 PM | Last Updated : 10th September 2020 10:00 PM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
திருத்துறைப்பூண்டியில் மின்மயானத்தை திறக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டியில் மின்மயானம் கட்டி அதை திறக்க முயற்சிக்காமல், மின்மயானத்தை குப்பைமேடாக மாற்றிவரும் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்தும், மின்மயானத்தை திறக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளா் முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் எம்எல்ஏக்கள் பழனிச்சாமி, உலகநாதன், வி.தொ.ச. மாவட்ட செயலாளா் பாஸ்கா், சிபிஐ ஒன்றிய செயலாளா் பாலு மற்றும் நிா்வாகிகள் முத்துக்குமரன், பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.