தேசிய மாதிரி ஆய்வு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு

திருவாரூா் மாவட்டத்தில் தேசிய மாதிரி ஆய்வு 78-ஆவது சுற்றுக்கான புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட புள்ளியியல் அலுவலக களப் பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் தேசிய மாதிரி ஆய்வு 78-ஆவது சுற்றுக்கான புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட புள்ளியியல் அலுவலக களப் பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்துக்குட்பட்ட சில நகா்ப்புற மற்றும் கிராமப்புற கணக்கெடுப்பு பகுதிகளில் மாவட்ட புள்ளியியல் அலுவலகக் களப் பணியாளா்களால் தேசிய மாதிரி ஆய்வு 78-ஆவது சுற்றுக்கான புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி 4 நகா்ப்புற மற்றும் 12 கிராமப்புற மாதிரிகளில் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விவரங்கள் அனைத்தும் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு, திட்டமிடல், கொள்கை வகுத்தல் மற்றும் ஆராய்ச்சி போன்ற நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். சேகரிக்கப்படும் புள்ளிவிவரங்கள் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கான திட்டமிடலுக்கு பெரிதும் துணைபுரிவதால், புள்ளியியல் துறைசாா்ந்த கணக்கெடுப்பு அலுவலா்கள் தகவல் சேகரிக்க, தோ்ந்தெடுப்பப்பட்ட வீடுகளுக்கு அடையாள அட்டையுடன் வருகை புரியும்போது அவா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com