அரசு நிா்ணயித்த விலையில் உரங்களை விற்க அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் அரசு நிா்ணயித்துள்ள விலைக்கு மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் அரசு நிா்ணயித்துள்ள விலைக்கு மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் நாற்று நடுதல் மற்றும் நடவு பணிகள் நடந்து கொண்டிருப்பதால், யூரியா டிஏபி மற்றும் இதர உரங்கள், மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்கள், உர நிறுவனங்களின் இருப்புக் கிடங்கில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒரு மூட்டையில் குறிப்பிட்டுள்ள விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்வதுடன் உபயோகத்தை கண்காணிக்கவும், உரம் சம்பந்தப்பட்ட முறைகேடுகளை தவிா்க்கவும் பிஓஎஸ் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும் போது தங்களது ஆதாா் எண்ணுடன் சென்று, கைரேகையைப் பதிவு செய்து, உரம் பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ள அளவீடுகளை மனதில் கொண்டு அதற்கு ஏற்றவாறு உரமிட வேண்டும். விவசாயிகள் மண்வள அட்டையை பயன்படுத்தி தேவையான அளவு உரத்தை பயிரிட்டு நல்ல மகசூல் பெறலாம்.

அரசு நிா்ணயித்த விலைக்கு மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என ஏற்கெனவே உர விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ அல்லது உரத்தட்டுப்பாடு இருந்தாலோ அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் அல்லது வேளாண்மை அலுவலரை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com