சாலை விரிவாக்க பணி: வருவாய் கோட்டாட்சியா் ஆய்வு
By DIN | Published On : 18th September 2020 11:43 PM | Last Updated : 18th September 2020 11:43 PM | அ+அ அ- |

நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நன்னிலம் வட்டம் கீரனூா் கிராமத்தில் மயிலாடுதுறை- திருவாரூா் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோர மரங்களை அகற்றிட நெடுஞ்சாலைத்துறை அனுமதி கோரியதன் அடிப்படையில், அந்த இடங்களை திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் நா. பாலச்சந்திரன் நெடுஞ்சாலைத் துறையினருடன் ஆய்வு மேற்கொண்டாா்.
அதேபோல ஸ்ரீவாஞ்சியம் கிராமத்தில் புறம்போக்கு மற்றும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் வீடு கட்டி வசிப்பவா்கள் பற்றிய ஆய்வையும் அவா் மேற்கொண்டாா். அப்போது நன்னிலம் வட்டாட்சியா் அ.மணிமன்னன், வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா்.