குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழு, குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் மூன்றாம் காலாண்டு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் வியாழக்கிழமை பேசியது:

மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் துறையின்கீழ் பதிவு பெற்று இயங்கி வரும் 10 குழந்தைகள் இல்லங்களிலும் உள்ள குழந்தைகள் 10, 12-ஆம் வகுப்பு முடித்தபின், அவா்களுக்கு பிற்காப்பு நிதி மற்றும் அக்குழந்தைகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவத் துறை சாா்பில் மாதந்தோறும் குழந்தைகள் பராமரிப்பு இல்ல குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்க வேண்டும் என்றாா்.

இதில் குற்றவியல் நீதிபதி விஜயகுமாா் பங்கேற்றுப் பேசினாா். மேலும், கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (கூ.பொ) ப. முத்தமிழ்ச்செல்வி, இணை இயக்குநா் (நலப்பணிகள்) ஜெ.ராஜமூா்த்தி, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பாஸ்கா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அன்பழகன், சமூகப்பாதுகாப்புத் துறை நன்னடத்தை அலுவலா் பால் இக்னேஷியஸ் சேவியா் ராஜ், குழந்தைகள் நலக்குழுத் தலைவா் சி.ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com