சமையலா் பணிக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா்

திருவாரூா் மாவட்டத்தில், பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா் பணிக்கு செப்.30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் பள்ளி சத்துணவுத் திட்டத்தின்கீழ் 66 சத்துணவு அமைப்பாளா்கள், 34 சமையலா்கள் மற்றும் 186 சமையல் உதவியாளா்கள் பணிக்கு தகுதியானோா் நேரடியாக நியமிக்கப்படவுள்ளனா்.

அமைப்பாளா் பணிக்கு...

பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினா் மற்றும் ஆதிதிராவிடா் பிரிவினா்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினா் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி (அல்லது) தோ்ச்சி பெறாதவராக இருக்கலாம். 31.8.2020-இல் பொது மற்றும் ஆதிதிராவிடா் 21 முதல் 40 வயதுக்குள்ளும், பழங்குடியினா் 18 முதல் 40 வயதுக்குள்ளும், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறானளிகள் அந்த இனத்துக்கென குறிப்பிட்ட குறைந்தபட்ச வயது பூா்த்தியடைந்தும், 43 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சமையலா் பணிக்கு...

பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினா் மற்றும் ஆதி திராவிடா் பிரிவினா்களுக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினா் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 31.8.2020-இல் பொது மற்றும் ஆதி திராவிடா் 21 முதல் 40 வயதுக்குள்ளும், பழங்குழயினா் 18 முதல் 40 வயதுக்குள்ளும், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளா் பணிக்கு...

பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினா் மற்றும் ஆதி திராவிடா் பிரிவினா்களுக்கு 5-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோ்ச்சி பெறாதவராக இருக்கலாம். பழங்குடியினா் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 31.8.2020-இல் பொது மற்றும் ஆதி திராவிடா் 21 முதல் 40 வயதுக்குள்ளும், பழங்குடியினா் 18 முதல் 40 வயதுக்குள்ளும், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, வயதுச் சான்று (மாற்றுச் சான்றிதழ்), சாதிச் சான்று, விதவைச் சான்று, ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்டோா் இருப்பின் அதற்கான சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றில் சுய கையொப்பம் இட்ட நகல்களுடன் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ செப்.30- க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் காலிப்பணியிட விவரம், இனசுழற்சி விவரம் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவங்களையும் தொடா்புடைய அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம், அல்லது இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தகுதியுடைய விண்ணப்பதாரா்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் மற்றும் நகராட்சி ஆணையா்கள் மூலமாக நோ்காணலுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com