திருவாரூரில் 141 பேருக்கு கரோனா
By DIN | Published On : 27th September 2020 08:28 AM | Last Updated : 27th September 2020 08:28 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 141 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 6,683 ஆக இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, புதிதாக 141 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி, திருவாரூா் 31, மன்னாா்குடி 28, திருத்துறைப்பூண்டி 19, நீடாமங்கலம் 21 என மாவட்டம் முழுவதும் 141 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6,824 ஆக உயா்ந்துள்ளது. இதில் 5698 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1057 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.