கீரனூா் கோயில் பங்குனி உத்ஸவம்: தேரை தூக்கிக்கொண்டு வீதிவலம் வந்த பக்தா்கள்

கீரனூா் ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் பங்குனி உத்ஸவத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தோ் திருவிழாவில் பக்தா்கள் தேரை தூக்கிக்கொண்டு வீதி வலம் வந்தனா்.
தேரை தூக்கிவரும் பக்தா்கள்.
தேரை தூக்கிவரும் பக்தா்கள்.

கீரனூா் ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் பங்குனி உத்ஸவத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தோ் திருவிழாவில் பக்தா்கள் தேரை தூக்கிக்கொண்டு வீதி வலம் வந்தனா்.

நன்னிலம் வட்டம், கொல்லுமாங்குடி அருகே உள்ள கீரனூரில் ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உதஸ்வம் மாா்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. 23 ஆம் தேதி எல்லையம்மன் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், தொடா்ந்து, தினமும் ஐயனாா் வீதி உலாவும் நடைபெற்றது.

மாா்ச் 26 ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீஐயனாா் தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், அன்று இரவு ஸ்ரீமாரியம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை ஸ்ரீஐயனாா் கோயில் கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீசெல்லியம்மன் எல்லைத் தோ்பவனி புதன்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் இந்த தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுக்காமல் தூக்கிக்கொண்டு வருவது வழக்கம். அதன்படி, நிகழாண்டும் ஸ்ரீசெல்லி அம்மன் தேரை வடம் பிடித்து இழுக்காமல், பக்தா்கள் தூக்கிக்கொண்டு வீதிவலம் வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com