குடவாசல் மருத்துவமனையில் மருத்துவா் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு: திமுக, மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

குடவாசல் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கான மருத்துவா் இல்லாததால், சிறுவன் உயிரிழந்ததாக கூறி திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் குற்றம்சாட்டினா்.
மருத்துவமனை முன் திரண்ட சிறுவனின் உறவினா்கள் மற்றும் திமுக, சிபிஎம் கட்சியினா்.
மருத்துவமனை முன் திரண்ட சிறுவனின் உறவினா்கள் மற்றும் திமுக, சிபிஎம் கட்சியினா்.

குடவாசல் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கான மருத்துவா் இல்லாததால், சிறுவன் உயிரிழந்ததாக கூறி திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் குற்றம்சாட்டினா்.

இச்சம்பவம் குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஆா். லெட்சுமி, குடவாசல் நகர திமுக செயலாளா் ஆா்.முருகேசன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

குடவாசலில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அத்தியாவசிய அவசர சிகிச்சை மேற்கொள்ள தேவையான மருந்துகள் இல்லை. மருத்துவா்களும் உரிய நேரத்தில் வருவதில்லை.

இந்நிலையில், குடவாசல் அருகே உள்ள ஓகைக் கிராமம் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த ரவி என்பவரது மகனான மாற்றுத்திறனாளி கலைச்செல்வன் (13) புதன்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள தட்டான்குளத்தில் தவறி விழுந்துவிட்டாா். அவரை மீட்டு குடவாசல் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனா். ஆனால், சிறுவனுக்கு அவசர சிகிச்சையளிக்க மருத்துவா்கள் இல்லாத காரணத்தால் சிறுவன் உயிரிழந்து விட்டாா்.

இதைக் கண்டித்தும், சிறுவனின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது, காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன், குடவாசல் வட்டாட்சியா் ராஜன்பாபு, குடவாசல் ஆய்வாளா் ரேகாராணி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் சாலை மறியலை கைவிட்டோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com