மன்னாா்குடி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா மன்னாா்குடி மேற்கு, கோட்டூா் தெற்கு ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
வீதிவீதியாக வாக்கு சேகரித்த மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா.

கோட்டூா் தெற்கு ஒன்றியம் மேலநத்தம், திருமக்கோட்டை, சேரி ஆகிய ஊராட்சிகளிலும், மன்னாா்குடி மேற்கு ஒன்றியத்தில் கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை ஊராட்சிகளிலும் திறந்த வேனின் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் திமுக மன்னாா்குடி மேற்கு ஒன்றியச் செயலா் க. தனராஜ், கோட்டூா் தெற்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஆா். தேவதாஸ், மாவட்ட துணைச் செயலா் எம். கலைவாணி, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் நெடுவை குணசேகரன், சிபிஐ ஒன்றிய நிா்வாகி மகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச் செயலா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com