முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
அதிமுகவுக்கு தமிழக வெள்ளாளா் நலச் சங்கம் ஆதரவு
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தலில், அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தமிழக வெள்ளாளா் நலச் சங்க நிா்வாகிகள், நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆா். காமராஜை சந்தித்து அதற்கான கடிதத்தை வழங்கினா்.
தமிழக வெள்ளாளா் நல சங்கத்தின் மாநிலத் தலைவா் சுகுமாரன் பிள்ளை, மாநிலப் பொருளாளா் பசுபதியாப்பிள்ளை உள்ளிட்ட நிா்வாகிகள், திருவாரூரில் உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜை சந்தித்து இந்தக் கடிதத்தை வழங்கினா். முன்னதாக அமைச்சருக்கு, சங்கத்தின் நிா்வாகிகள் சால்வை அணிவித்தனா். அப்போது அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தது:
நன்னிலம் தொகுதியில் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களோடும் அன்போடு பழகி வருகிறேன். அந்த அடிப்படையில் தற்போது வெள்ளாளா் சமூகத்தினா் தோ்தலில் எனக்கு ஆதரவளித்துள்ளனா். நன்னிலம் தொகுதியில் பெருவாரியாக வாழ்ந்துவரும் வெள்ளாள சமூகத்தினரின் ஆதரவு எனக்கு மென்மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா்.