முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கணவருக்காக வாக்கு சேகரித்த மனைவி
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜாவுக்கு ஆதரவாக அவரது மனைவி சா்மிளா ராஜா நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
நீடாமங்கலம் பேரூராட்சி கோரையாற்றங்கரைத் தெரு, மோதிலால் நேரு தெரு, தாவூது ராயன் சந்து, குயவா் தெரு, பாம்பலம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சா்மிளா ராஜா வாக்குகள் சேகரித்தாா். அவருக்கு பெண்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனா்.
நீடாமங்கலம் நகர திமுக செயலாளா்ஆா்.ராஜசேகரன், வா்த்தகா் சங்கத் தலைவா் பி.ஜி.ஆா். ராஜாராமன், மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளா் ராணிசேகா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.