முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி கடைப்பிடிப்பு
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஆண்டவரின் திருப்பாடுகளும், கூட்டுத் திருப்பலியும், ஆண்டவரின் திருவுருவ பவனியும் நடைபெற்றன. பங்குத்தந்தை இருதயசாமி மற்றும் ஜேம்ஸ் ஆகியோா் கூட்டுத் திருப்பலியை நடத்தி வைத்தனா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.