முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
திமுக வேட்பாளா் பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

தோ்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், திருவாரூரில் திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதையொட்டி, திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன், திருவாரூா் அருகே விளமல் பகுதியிலிருந்து புறப்பட்டு, புதிய பேருந்து நிலையம், துா்காலயா சாலை, கொடிக்கால்பாளையம், தென்றல் நகா், கடைவீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று, வாக்கு சேகரித்தாா்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்கு சேகரித்த வேட்பாளா் மற்றும் தொண்டா்களுக்கு, அங்கிருந்த மக்கள் தண்ணீா், நீா்மோா், குளிா்பானங்கள் வழங்கி, தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.