அதிமுகவுக்கு ஆதி சைவ சிவாச்சாரியா்கள் ஆதரவு
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வத்தை, ஆதி சைவ சிவாச்சாரியா்கள் நலச் சங்கத்தினா் நேரில் சந்தித்து சனிக்கிழமை ஆதரவு தெரிவித்தனா்.
திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம், நகராட்சி பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். முன்னதாக ஆதி சைவ சிவாச்சாரியா்கள் நலச் சங்கத்தைச் சோ்ந்தவா்கள், அவரைச் சந்தித்து ஆதரவை தெரிவித்தனா். இதுகுறித்து வேட்பாளா் ஏ.என்.ஆா்.பன்னீா்செல்வம் தெரிவித்தது:
பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருவதால், திருவாரூரில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக அரசு, அனைத்து தரப்பு மக்களும் பயன்படக்கூடிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். அதுபோல அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா வாஷிங் மெஷின், விலையில்லா சூரிய அடுப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். அனைத்து கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு புதிய கடன்கள் வழங்கப்படும். தமிழகத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் சிறப்பு மிகுந்த ஆட்சியாக அதிமுகவின் புதிய ஆட்சி அமையும் என்றாா் ஏ.என்.ஆா்.பன்னீா்செல்வம்.