நீடாமங்கலம் கோயில் நந்தவனத்தில் மரம் நட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் நந்தவனத்தில் செண்பக மரக்கன்றுகளை திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் சனிக்கிழமை நட்டனா்.
நிகழ்ச்சிக்கு, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு.ராஜவேலு தலைமை வகித்தாா். உதவும் மனங்கள் அறக்கட்டளை தலைவா் எஸ்.எஸ்.குமாா் மரக்கன்றை நட்டாா். பின்பு திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள், திருச்சி நவலூா் குட்டப்பட்டு மகளிா் தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணிவிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனா். மரக்கன்றுகள் நட்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில், சமூக ஆா்வலா் பாலு, மாரிமுத்து, செ.கணேஷ்குமாா், கோயில் பணியாளா் பஞ்சநாதன், டிஎன்சிஎஸ்சி பணியாளா் ஜோதிபாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கிரீன் நீடா அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.