பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் உள்பட 73 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் உள்பட 73 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரையிலான நிலவரப்படி 12,136 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சனிக்கிழமை பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் (53 வயது பெண்) உள்பட 73 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், திருவாரூா் 29, நன்னிலம் 17, மன்னாா்குடி 16 என மாவட்டம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,209 ஆக உயா்ந்துள்ளது.